நீட் தேர்வில் மத்திய அரசு தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்களை வினாத்தாள் மொழி பெயர்ப்பு நியமிக்கவில்லை. மாறாக சிபிஎஸ்இ தாமாகவே மொழிபெயர்ப்பாளர்களை நியமித்துக் கொண்டது என அதிமுக எம்.பி விஜிலா தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 6-ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில், தமிழகத்தில் இருந்து 1,14,602 பேர் தேர்வு எழுதினர். இதில், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதியவர்கள் 24,720 பேர்.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் 2 வாரத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடவும் சிபிஎஸ்இக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் கூறுகையில், "நீட் வினாத்தாளை தமிழில் மொழிபெயர்க்க தமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமிக்கவில்லை தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்பாளர்களை நியமித்ததாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுவது தவறு சிபிஎஸ்இ தாமாகவே மொழிபெயர்பாளர்களை நியமித்துக் கொண்டது" என அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.