ஆட்சியை பிடிக்கப்போவது யார்?-குஜராத், இமாச்சல பிரதேசம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Dec 18, 2017, 06:54 AM IST

காந்தி நகர்: குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனால், எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில், குஜராத்திற்கு கடந்த 9ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் முடல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

குஜராத்தில், கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சியை தக்கவைத்திருந்த பாஜக, தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஆட்சியை நடத்துமா அல்லது, இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல நாட்களாக நடத்திய பிரசாரம் இதற்கு கைக்கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த தேர்தலில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி, துணை முதுல்வர் நிதின் பட்டேல், மாநில பாஜக தலைவர் ஜிது வகானி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் சக்திசிங் கோகில், அர்ஜூன் மோத்வாடியா, சித்தார்த் பட்டேல் மற்றும் அல்பேஷ் தாக்குர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களம் இறங்கினர். இந்த இரண்டுகட்ட தேர்தல்களிலும் 68.41 சதவீத வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், இமாச்சலபிரதேச மாநிலத்திற்கு கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இங்கு, ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், 2007ம் ஆண்டுக்கு பிறகு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற நனைக்கும் பாஜகவும் கடும் போட்டியில் இறங்கின. 68 உறுப்பினர்கள் கொண்ட சிறிய மாநிலம் என்றாலும், பிரதமர் மோடி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் மேற்கொண்டனர்.
இம்மாநில தேர்தலில் மொத்தம் 75.28 சதவீத வாக்குகள் பதிவானது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 35 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. கடந்த தேர்தலில் காங்கிரசில் 36 பேரும், பாஜகவில் 26 பேரும் வெற்றி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் அறிவித்ததுபோல், குஜராத் மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதற்காக குஜராத்தில் 37 மையங்களும், இமாச்சல பிரதேசத்தில் 42 மையங்களு ஒதுக்கப்பட்டன. இந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு மையத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் முழுமையாக தெரிந்துவிடும், தொடர்ந்து, மாலை 5 மணிக்குள் அனைத்து முடிவுகளும் தெரிந்துவிடும்.

இரு மாநிலங்களிலும் பாஜதாவிற்கும், காங்கிரசுக்கும் ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், தேர்தல் முடிவுகள் குறித்து, பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading ஆட்சியை பிடிக்கப்போவது யார்?-குஜராத், இமாச்சல பிரதேசம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை