மீண்டும் சரிந்த பெட்ரோல், டீசல் விலை!

Jul 23, 2018, 10:55 AM IST

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில், ஒவ்வொரு நாளும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

சர்வதேச அளவில் இருக்கும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தும், ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் இந்த விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் பெட்ரோல் விலை டெல்லியில் 76.30 ரூபாயும், 79.15 ரூபாயாக கொல்கத்தாவிலும், சென்னையில் 79.25 ரூபாயாகவும், மும்பையில் 83.75 ரூபாயாகவும் உள்ளது.

டீசல் விலையைப் பொறுத்தவரை டெல்லியில் 67.89 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 70.56 ரூபாயகவும், மும்பையில் 72.07 ரூபாயாகவும், சென்னையில் 71.70 ரூபாயாகவும் உள்ளது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

சர்வதேச அளவில், அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நிலவி வருவதால் பெட்ரோல் டீசல் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

You'r reading மீண்டும் சரிந்த பெட்ரோல், டீசல் விலை! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை