டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காவிரி மேலாண்மை வாரிய்ம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறது என்றும் இதனால் அங்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஐந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், ஒலிமாசுவும் ஏற்படுவதால் போராட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள், ஒலிபெருக்கிளையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டன. இதனால், விவசாயிகளின் போராட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இந்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதித்து உத்தரவிட்டது.