காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ட்விட்டரில் மத்திய அரசை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், மாட்டை கடத்தியதாக, ரக்பர் கான் என்பவர் தாக்கப்பட்டு இறந்தார். இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் ‘அல்வாரில் இருக்கும் போலீஸார், இறக்கும் நிலையில் இருந்த ரக்பர் கானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணி நேரம் ஆக்கியுள்ளனர். ஆனால், மருத்துமனை 6 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருந்துள்ளது. ஏன்?
போகும் வழியில் அவர்கள் ஒரு டீ பிரேக் எடுத்துள்ளனர். இது தான் ஈவு இரக்கமற்ற மோடியின் ‘புதிய இந்தியா’. இதில் மனிதாபிமனம் வெறுப்பாக மாறியுள்ளது’ என்று விமர்சித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த ‘பசுவதை’ தாக்குதல்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்வாரில் நடந்த சம்பவம் குறித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ராஜஸ்தான் போலீஸ் தெரிவித்துள்ளது.