குஜராத்தில் பாஜக மோசடி செய்தே ஜெயித்தது!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதால் தான் பாஜக குஜராத்தில் வெற்றிபெற முடிந்தது என்று பட்டேல் சமூக தலைவர் ஹர்த்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Dec 18, 2017, 20:10 PM IST

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதால் தான் பாஜக குஜராத்தில் வெற்றிபெற முடிந்தது என்று பட்டேல் சமூக தலைவர் ஹர்த்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Hardik Patel

182 இடங்கள் கொண்ட குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 இடங்களை பிடித்து ஆட்சியமைக்க உள்ளது. தொடர்ந்து 6ஆவது முறை பாஜக ஆட்சியமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் செல்வாக்கு மிக்க விவசாய சாதியான பட்டிதார் இனத்தை சேர்ந்த பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர் ஹர்திக் பட்டேல். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தீவிரமாகப் போராடிவந்தபோது போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஹர்திக் குஜராத்தில் பிரபலமானார்.

இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ள ஹர்த்திக் பட்டேல், “பா.ஜ.கவின் வெற்றிக்கு காரணம் அரசியல் சாதுரியம் அல்ல, வாக்குப்பதிவு இயந்திரமும் பணமுமே.

எங்கள் பட்டிதார் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருந்த இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பேரணிகளுக்கு கூடிய குறைந்த கூட்டமே அவர்களின் செல்வாக்கிற்கு சாட்சி. அப்போது இல்லாத மக்களின் ஆதரவு சில நாட்களில் எப்படி மாறியது? வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதுதான் ஒரே சாத்தியம்.

அகமதாபாத், சூரத் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட 12 முதல் 15 தொகுதிகளில் வெறும் 200, 400, 800 வாக்குகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனை இருந்த்து.

சில இடங்களில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டதை நானே நேரடியாக பார்த்தேன். அந்த இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏ.டி.எம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும்போது, ஈ.வி.எம் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்) ஹேக் செய்யமுடியாதா என்ன? என்று கேள்வி எழுப்புயுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒரு கோடி மக்கள் கூடிய பேரணி எப்படி பயனற்றதாக போகும் என்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

You'r reading குஜராத்தில் பாஜக மோசடி செய்தே ஜெயித்தது! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை