கேரளாவில் கனமழை... 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை நிரம்பியது

26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை நிரம்பியது

Aug 9, 2018, 19:18 PM IST

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன.

Idukki Dam

மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால், முல்லைப்பெரியார் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை நிரம்பியதை தொடர்ந்து, அந்த அணை திறக்கப்பட்டுள்ளது.

Idukki Dam

வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடரும் பருவமழை காரணமாக, அப்பகுதி சீர்குலைந்துள்ளது.

Kerala Rain

மண் சரிவில் சிக்கி இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Kerala Rain

கனமழை காரணமாக கொச்சி விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வயநாடு, கொல்லம், இடுக்கி பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Kerala Rain

மழை வெள்ள பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ராணுவ உதவியை கோரியுள்ளார்.

You'r reading கேரளாவில் கனமழை... 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை நிரம்பியது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை