மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பல சாதனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
தொலைத்தொடர்பும், தங்க நாற்கர சாலை திட்டமும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசின் சாதனைகளில் மிக பிரதானமாக பேசப்படுகிறது. அவரது ஆட்சி காலத்தில் இன்னும் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை இந்தியாவின் தொலைதொடர்பு வளர்ச்சியை 3 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தியது. இந்த சாதனையை மாற்று கட்சியினர் பாராட்டினர்.
டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க, புதிய அமைச்சரகத்தை வாஜ்பாய் ஏற்படுத்தினார்.
‘சர்வ சிக்ஷா அபியான்' எனப்படும் அனைவருக்கும் கல்வி ஒரு அடிப்படை உரிமை என்ற சட்டத் திருத்த மசோதாவை அவர் நிறைவேற்றினார்.
வட கிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக புதிய அமைச்சரகத்தை வாஜ்பாய் உருவாக்கினார்.
கிராமப்புற சாலை வசதிகளை மேம்படுத்த 'பிரதமர் கிராம சதக்' திட்டத்தை துவக்கி, சாலை வசதிகளே இல்லாத கிராமங்களை, தரமான சாலைகள் மூலம் இணைத்தார்.
பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க, புதிய முயற்சியாக டெல்லி - லாகூர் பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்து, முதல் ஆளாக அதில் பயணித்தார்.
பழங்குடி, சமூக நலன், சமூக நீதி போன்றவைக்கு அமைச்சகத்தை ஏற்படுத்தியவர் வாஜ்பாய்.
இவர் ஆட்சி காலத்தினல்தான் பொக்ரான் அனுகுண்டு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.