கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு ரயில்வே, ரயில் மூலம் குடிநீர் கொண்டுசென்றது. ஈரோட்டிலிருந்து குடிநீர் ஏற்றிய ரயில் நேற்று 4 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்ததாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 80 அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருச்சி முக்கொம்பு அணைக்கு விநாடிக்கு 2.10 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
முக்கொம்பில் இருந்து காவிரியில் 1. 44 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் 65,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கொம்பில் இருந்து 17 கிளை வாய்க்காலில் ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
கொள்ளிடம் அருகே வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களை விட்டு வெளியேற மக்கள் மறுக்கின்றனர். வீடுகளில் உள்ள உடமைகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறுமாறு அமைச்சர் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.