ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கிருஷ்ணா நதியில் மூழ்கி 4 சிறுவனர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி, தாடிபள்ளி மண்டலத்தில் உள்ள குடிமேடா கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் ஏழு பேர், அந்த கிராமத்தில் பாய்ந்தோடும் கிருஷ்ணா நதியில் குளிக்க சென்றனர்.
அப்போது திடீரென கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நான்கு சிறுவர்களும் அடித்து செல்லப்பட்டனர்.
சிவா, கிராந்திகுமார், சசி, தினேஷ் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதை கவனித்த, சக மாணவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது குறித்து கிராம மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்ற நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் தேடும் பணி சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணா நதி வெள்ளத்தில் 4 சிறுவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் குடிமேடா கிராமமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.