ரக்ஷா பந்தனை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கட்டி தனது அன்பை வெளிப்பிடுத்தினார்.
நாடு முழுவதும் இன்று சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் தான் இந்த பண்டிகையை அதிகளவில் கொண்டாடுவர். ஆனால், இது தற்போது தென் மாநிலங்களிலும் பரவி அனைவரும் கொண்டாடுகின்றனர்.
பெண்கள் தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். சகோதரர்கள் தங்களது தங்கைகளுக்கு பரிசுகள் வழங்குவார்கள்.
அந்த வகையில், இன்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்துக்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் ராக்கி கட்டினர். அதேபோல், பிரதமர் மோடிக்கும் சிறுமிகள், பெண்கள் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கட்டி தனது அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார்.