நாடு முழுவதும் இயற்கை பேரிடரில் சிக்கி 993 பேர் உயிரிழப்பு - உள்துறை அமைச்சகம்

இயற்கை பேரிடரில் சிக்கி 993 பேர் உயிரிழப்பு

Aug 27, 2018, 08:08 AM IST

இந்த ஆண்டில் கனமழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இதுவரையில் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

floods

கேரளா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அசாம் உள்பட நாட்டின் பல மாநிலங்களில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 993 ஆக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலான்மை பிரிவு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 17 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ள கேரளாவில் 387 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 204 பேரும், மேற்கு வங்காளத்தில் 195 பேரும், கர்நாடகாவில் 161 பேரும், அசாமில் 46 பேரும் வெள்ளம் தொடர்பான பேரிடரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading நாடு முழுவதும் இயற்கை பேரிடரில் சிக்கி 993 பேர் உயிரிழப்பு - உள்துறை அமைச்சகம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை