கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா செல்கிறார்.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல மாவட்டங்கங்கள் நீரிழ் மூழ்கி வெள்ளக்காடானது. மேலும், மழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, கேரளாவில் மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் பார்வையிடுகிறார். இந்த இரண்டு நாட்களில், மீனவர்கள், தன்னலம் கருதாமல் தொடர்ந்து சேவை செய்து வரும் தன்னார்வலர்கள், நிவாரணம் வேண்டுவோருக்கு உதவி வருகிறவர்கள் ஆகியோரை சந்தித்தும் பேசுகிறார்.
மேலும், நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொது மக்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.