என்.டி.ஆரின் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா மரணம்...

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Nandamuri Harikrishna

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நார்கெட்பள்ளியில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தெலுங்கு தேச கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக நந்தமூரி ஹரிகிருஷ்ணா காரில் சென்று கொண்டிருந்தார். நர்கெட்பள்ளி அருகே சென்ற போது எதிரே வந்த காரின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.

Road Accident-AP

மூன்று முறை உருண்டு நந்தமூரி ஹரிகிருஷ்ணா சென்ற கார் தூக்கி வீசப்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு, பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தமூரி ஹரிகிருஷ்ணா உயிரிழந்தார்.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் தந்தையான ஹரிகிருஷ்ணாவுக்கு 61 வயதாகிறது. முன்னாள் அமைச்சரான இவர் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

Car Acciden

மகன் ஜானகிராமனை போல் ஹரிகிருஷ்ணாவும், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE ABOUT :