கேரள வெள்ள நிவாரணத்திற்காக டீக்கடை நடத்தி ரூ.51 ஆயிரம் நிவாரண நிதி திரட்டி மும்பை மாணவர்கள் வழங்கியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி சுமார் 400க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு மழை பெய்ததை அடுத்து கேரளா பெரும் சேதத்தை சந்தித்தது.
கேரளாவில் சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், நாடு முழுவதிலிருந்தும் பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக மும்பை மாணவர்கள் டீக்கடை நடத்தி ரூ.51 ஆயரம் திரட்டி அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், லத்தூரில் உள்ள அகமதுபூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கேரளா வெள்ள நிவாரண நிதி திரட்ட முடிவு செய்தனர். அதன்படி டீக்களை நடத்தினர்.
டீக்கடை நடத்திய மாணவர்கள் தினமும் பணத்தை சேர்த்து வந்தனர். இந்த பணம் ரூ.51 ஆயிரமாக திரண்டது.
இந்த பணத்தை, பள்ளி அலுவலர்களுடன் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்த மாணவர்கள், ரூ.51 ஆயிரத்தை வழங்கி கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு சேர்க்கும்படி தெரிவித்தனர். மாணவர்களின் இந்த நெகிழ்ச்சிக்குறிய செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.