லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்த நல்ல பாம்பு

by SAM ASIR, Sep 10, 2018, 18:51 PM IST

ஒடிசா மாநிலத்தில் பெண்கள் விடுதி ஒன்றினுள் நல்ல பாம்பு புகுந்தது.

ஒடிசா மாநிலம், மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பரிபாடா என்ற நகரத்தில் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதி அறை ஒன்றினுள் நல்ல பாம்பு ஒன்று படுத்து கிடந்ததை பெண் ஒருவர் பார்த்துள்ளார். இன்னொரு பெண்ணின் மறுபக்கம், பாம்பு படுத்திருந்ததால், அப்பெண்ணை மெல்லிய குரலில் எச்சரித்து நகர்ந்து வரச் செய்தார்.

விடுதி காப்பாளர், பாம்பு பிடிக்கும் திறமை வாய்ந்த கிருஷ்ணா சந்திர கோச்யாட் என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து மீன் பிடிக்கும் வலையை பயன்படுத்தி பாம்பை பிடித்தார்.

பிடிபட்ட பாம்பு ஐந்தடி நீளம் இருந்தது. தங்களை சீண்டாத பட்சத்தில் நல்ல பாம்புகள் யாரையும் தாக்குவதில்லை. தற்காப்புக்காகவே அவை மனுஷரை கொத்துகின்றன. பிடிபட்ட பாம்பு சிம்லிபால் என்ற வனப்பகுதியினுள் விடப்பட்டது.

நல்ல பாம்பு 1972ம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும்.

You'r reading லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்த நல்ல பாம்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை