பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம்: வெங்கைய நாயுடு

பயங்கரவாத... ஐ.நா மன்றத்தில் தீர்மானம் - வெங்கைய நாயுடு

by Rajkumar, Sep 16, 2018, 15:36 PM IST

பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா மன்றத்தின் ஒருங்கிணைந்த தீர்மானத்தை துரிதமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறார்.

 

பின்னர், செர்பியா நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில்,  "பயங்கரவாதத்தில் நல்லது கெட்டது என்று செயற்கையாக பேதம் பார்க்க முடியாது. இன்று உடனடியாக சர்வதேச நடவடிக்கை மூலம் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும்" என்றும் கூறினார். "பயங்கரவாதம் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதால் அதற்கு எதிராக உலக அளவில் வலுவான சக்தியை திரட்டுவது அவசியம்" என்றும் கூறினார். 

ஐ.நா பாதுகாப்புச்சபை சீர்திருத்தம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தில் செர்பியாவும் பங்கு கொள்கிறது. அணுசக்தி சாதனங்கள் வழங்கும் குழுவில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை செர்பியா ஆதரிப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

செர்பியா மால்டா ரொமானியா நாடுகளில் அவர் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மால்டா செல்லும் அவர், இந்தியா, மால்டா, பரஸ்பர உறவுகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச இருகிறார். வரும் செவ்வாய் அன்று இந்த பயணத்தின் இறுதிக் கட்டமாக ரொமானியா செல்கிறார்.

You'r reading பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம்: வெங்கைய நாயுடு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை