ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இதனால், பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணபட்டு வருகின்றன. தற்போது 8 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 39940 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இவரை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 19,779, திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 10,307 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக 519 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன. இது, நோட்டாவை விட குறைவாகவும்.
இதுகுறித்து, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “மத்தியில் ஆளும் கட்சி நோட்டாவைவிட கால் பங்கு மட்டுமே பெற்று சாதித்துள்ளது. பொறுப்புடைமைக்கான நேரம் இது. வரும் 2019ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கிறேன்” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.