வங்கி பணி கௌரவமானது. அதுவும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி என்றால் சொல்லவேண்டியதில்லை. பலருக்கு வங்கியில் வேலை என்பது கனவாகவே இருக்கும். அப்படி கனவு காண்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இதோ உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு!
ஐபிபிஎஸ் (IBPS) என்னும் வங்கி பணியாளர் தேர்வு கழகம் (Institute of Banking Personnel Selection) 19 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 7,275 எழுத்தர் (கிளர்க்) பணியிடங்களுக்காக தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இத்தேர்வு முதனிலை (Preliminary) மற்றும் முதன்மை (Main) என்ற இரு கட்டமாக நடைபெறும்.
20 முதல் 28 வயதுடைய பட்டதாரிகள் இத்தேர்வினை எழுதலாம். பிற பிற்படுத்தப்பட்டோருக்கு உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள், முன்னாள் இராணுவ வீரர்களுக்கு உச்சவரம்பு 50 உள்ளிட பல்வேறு விதிகளின்படி 8 ஆண்டுகள், விவாகரத்து மற்றும் கணவனை இழந்த மகளிருக்கு 9 ஆண்டுகள், 1980ம் ஆண்டு தொடக்கம் முதல் 1989 இறுதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசித்தோருக்கு 5 ஆண்டுகள், 1984ம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு 5 ஆண்டுகள், போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் பணியாற்றி இழந்தோருக்கு 5 ஆண்டுகள் உச்ச வரம்பில் சலுகை உண்டு.
இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
விண்ணப்பிக்கக்கூடிய நாட்கள்: 2018 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10 வரை
கட்டணம் செலுத்தக்கூடிய நாட்கள்: 2018 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10 வரை
தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான அழைப்பினை தரவிறக்கம் செய்தல்: நவம்பர் 2018
தேர்வுக்கு முந்தைய பயிற்சி நடத்தப்படும் நாட்கள்: 2018 நவம்பர் 26 முதல் 2018 டிசம்பர் 1 வரை
முதனிலை (பிரிலிமினரி) தேர்வு - தேர்வர் அடையாள அட்டை தரவிறக்கம் செய்தல்: நவம்பர் 2018
முதனிலை தேர்வு (இணைய வழி) நடைபெறும் நாட்கள்: 2018 டிசம்பர் 8, டிசம்பர் 9, டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 16
முதனிலை தேர்வு முடிவு வெளியாகும் நாள்: டிசம்பர் 2018 அல்லது ஜனவரி 2019
முதன்மை (மெயின்) தேர்வு - தேர்வர் அடையாள அட்டை தரவிறக்கம் செய்தல்: ஜனவரி 2019
முதன்மை தேர்வு (இணைய வழி) நடைபெறும் நாள்: 2019 ஜனவரி 20
விண்ணப்ப கட்டணம்:
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு: ரூ.100/- மட்டும்
ஏனையோருக்கு: ரூ.600/- மட்டும்
விண்ணப்பிக்கக்கூடிய இணைய இணைப்பு: https://ibpsonline.ibps.in/crpclk8sep18/
(இது வழிகாட்டல் மட்டுமே: தகவல்கள் அனைத்தையும் https://www.ibps.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளவும்).
ஆயத்தமாகுங்க; வெற்றி பெறுங்க; வேலை வாங்குங்க !