இமாச்சல் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருவதால், காணாமல் போன 35 மாணவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குலு, மணாயிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, சாலைகள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குலு, மணாலியில் குவிந்துள்ள சுமார் இரண்டாயிரம் சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கியுள்ளனர். மேலும், பியாஸ் நதியில் பேருந்து ஓன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளிப்பெருக்கில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தில் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டவர்களின் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. ரூர்கேசா ஐஐடியில் இருந்து சுமார் 35 மாணவர்கள் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள லகுல் மலையில் ஏறும் பயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த 35 மாணவர்களும் தற்போது காணாமல் போயுள்ளனர். இவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெய்து வரும் கனமழையால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.