பிரதமர் மோடிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட உள்ளதாக, ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் சவால்களை சந்தித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உலகளவில் 6 பேர் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும், வரும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதி ஏற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பிரதமர் மோடி உள்பட 6 பேருக்கு சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.