ராஜஸ்தான் மாநிலத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு பெண்களின் உடலை சாலையில் வைத்து அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடலை, பார்மெர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இவர்களின் உடலை நேற்று மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உடல்களை மருத்துவமனையின் வெளியே சாலையில் வைத்து அம்மருத்துவமனையின் அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு மருத்துவர்களே இப்படி பொறுப்பற்று சாலையில் பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பெரும் கண்டனங்களை எழுப்பி உள்ளது.
இதுதொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட கூடுதல் ஆட்சியர் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.