பெற்றோர் யார் என தெரியாதவர்கள் தான், தங்களை மதச்சார்ப்பற்றவர்கள் என கூறிக் கொள்கின்றனர் என்று கூறிய கூறியதற்கு பாஜக அமைச்சர் ஹெக்டே மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த பிராமண இளைஞர் சங்க கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய, மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும், கர்நாடக மாநில, பாஜக முக்கிய தலைவருமான, ஆனந்த் குமார் ஹெக்டே, மதச்சார்பின்மை குறித்தும், அரசியலமைப்பு சட்டம் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், ‘மக்கள், தங்கள் மதத்தின் அடிப்படையில் தங்ளை அடையாளம் காணவேண்டும். பெற்றோர் யார் என தெரியாதவர்கள் தான், தங்களை மதச்சார்ப்பற்றவர்கள் என கூறிக் கொள்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்திலும், மதச்சார்பின்மை குறித்த வார்த்தைகள் திருத்தப்பட வேண்டும்’ என ஹெக்டே பேசியிருந்தார்.
இந்நிலையில் ஹெக்டேயின் கருத்துக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனையடுத்து இது குறித்து பேசிய ஹெக்டே, “இந்திய அரசயில் அமைப்பு சட்டமும் பாராளுமன்றமுவே உயர்வானது. அதையும் பாபா சாகேப் அம்பேத்கரையும் நான் மதிக்கிறேன்.
இந்திய குடிமகனாக அதற்க எதிராக நான் செயல்பட மாட்டேன். எனது பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.