சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக செயல்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பூமியின் சாம்பியன் விருதை ஐநா பொதுச்செயலாளர் வழங்கினார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக முயற்சியும், அதற்காக பாடுபடுபவர்களையும் கவுரவிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டின் உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சழல் பாதுகாவலர்களாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்பட 6 பேரை ஐ.நா.சபை தேர்வு செய்தது.
இதற்கான விழா, இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வக¬யில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று வழிநடத்துவதற்காகவும், 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை ஒழிப்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்காகவும் ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோயோ குட்டரஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருதினை வழங்கி கவுரவித்தார்.