2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டி,மதுராவில் 10 நாட்கள் தொடர்ந்து யாகம் நடைபெற உள்ளது இதற்க்கான் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்திய நாட்டின் பிரதமரானார்.அவரது 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக 10 நாட்கள் தொடர்ந்து யாகம் நடைபெற உள்ளது.
யமுனை நதிக்கரையில் 10 நாட்கள் தொடர்ந்து நடக்க இருக்கும் இந்த யாகம், அக்டோபர் 10ஆம் தேதி தொடங்குகிறது.
மதுராவில் உள்ள மோடியின் அறக்கட்டளை இந்த யாகத்தை நடத்த உள்ளது. இந்தியாவில் உள்ள எல்லா இடங்களிலில் இருந்து பண்டிதர்கள் மற்றும் இந்து மத குருக்கள் இந்த யாகத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
இது குறித்து மோடியின் அறக்கட்டளைதலைவர் பவன் பாண்டே கூறியதாவது சச்சந்தி மகாயாகம் யமுனை நதிக்கரையில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள புன்னியத் தலங்களான காசி, ஹரித்துவார் , நாசிக் போன்ற இடங்களில் இருந்து சன்யாசிகள் இந்த யாகத்தில் கலந்துகொள்வர்.
இந்த யாகத்தின்போது யமுனை நதிக்கரையில் லட்ச கணக்கில்விளக்குகள் ஏற்றப்படும். இதன் மூலம் கடவுளின் யாசிபெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேந்தெடுக்கப்படுவார்" என்று கூறினர்.