ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்: 63.83 சதவீதம் வாக்குப்பதிவு

by Isaivaani, Oct 8, 2018, 20:02 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் 63.83 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 1145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, இன்று ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட 149 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்களுக்காக 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இத்தேர்தலையட்டி, ஜம்மு மாவட்டத்துக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. இது மாலை 4 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தேர்தலில், 11 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 584 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 63.83 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மீதமுள்ள நகராட்சி அமைப்புகளுக்கு வரும் 10, 13, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் வரும் நவம்பர் 17ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக டிசம்பர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்: 63.83 சதவீதம் வாக்குப்பதிவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை