கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண் காவல் அதிகாரியை சட்டமன்ற உறுப்பினர் அறைந்ததும், அந்த பெண் காவலர் திருப்பி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் ஹிமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆஷா குமாரி வந்திருந்தார். ஆனால், தொண்டர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஆஷாகுமாரியை அனுமதிக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த ஆஷா குமாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், ஆஷாகுமாரி அங்கிருந்த இளம் பெண் காவலரை திடீரென கன்னத்தில் அறைந்தார். உடனே, அந்த பெண் காவலரும் பதிலுக்கு திருப்பி அடித்துவிட்டார். இதனால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
வீடியோ இங்கே: