கேரளாவின் முதல் தலித் அர்ச்சகா் சபரிமலை தீா்ப்புக்கு எதிா்ப்பு!

kerala first dalit priest yadu krishnan condemns the Women entry in Sabarimala

Oct 10, 2018, 16:30 PM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற நடைமுறையை மாற்றி உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடா்பாக கேரளாவின் முதல் தலித் அர்ச்சகரான யது கிருஷ்ணன் கூறுகையில் "குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பதை பாகுபாடு பார்ப்பதாக கருதக் கூடாது. ஐந்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் எனவே பாலின பாகுபாடு காட்டப்படுகிறது என கூறமுடியாது.

பொதுவாக கோவில் என்பது தனித்துவமான இடம் அங்கு ஜாதி, மதம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதே கிடையாது பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குவது என்பது சமூக சீா்திருத்தமாக பார்க்க முடியாது தவிர மத நம்பிக்கை மீதான தாக்குதலாக தான் கருத முடியும்.

ஏற்கனவே உள்ள மத நம்பிக்கைகள் தொடர வேண்டும் என பெரும்பான்மை சமூகம் கருதுகிறது ஆனால் மற்றவா்கள் குறிப்பாக மத நம்பிக்கை இல்லாதவா்கள் அவற்றை தகா்த்து எறிந்து பிரச்சினைகளை உருவாக்க பார்க்கின்றனா்" என்று அவா் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1200க்கு மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அங்கு பிராமணர்களே அர்ச்சகர்களாக உள்ள நிலையில் பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமிக்க கேரள தேவசம் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு சிபாரிசு செய்தது. அதை ஏற்று அவர்களை கேரள அரசு நியமித்தது.

36 பேரில் தலித் இனத்தை சேர்ந்தவர்கள் 6 பேர் ஆவர் அவர்களில் ஒருவரான யது கிருஷ்ணன்  (22வயது) என்பவர் திருவல்லா அருகே உள்ள மணப்புரம் சிவன் கோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார், இவர் கேரளாவின் முதல் தலித் அர்ச்கர் என்பது குறிப்பிடதக்கது.

 

You'r reading கேரளாவின் முதல் தலித் அர்ச்சகா் சபரிமலை தீா்ப்புக்கு எதிா்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை