சென்னை: புத்தாண்டு பிறக்க இன்னும் ஓரே நாளில் உள்ள நிலையில், பொது மக்களின் வசதிக்காக நாளை இரவு 12.30 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என தொடர்பு துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு பிறப்பையொட்டி பொதுமக்கள் வழிப்பாட்டு தலங்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வது வழக்கம். இதனால், வழக்கமாக இரவு 10 மணி வரையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, நாளை பொதுமக்களின் வசதிக்காக நாளை இரவு 12.30 மணி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடர்பு துறை இணை இயக்குனர் எஸ்.பாண்டியன் கூறுகையில், “ புத்தாண்டு முன்னிட்டு நாளை ஒரு நாளுக்கு இரவு 12.30 மணி வரை மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்” என கூறினார்.