ஒடிசாவில் தாக்கிய டிட்லி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான டிட்லி புயலால் ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் எங்கும் மரங்கள் முறிந்து விழுந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் எதிரொலியால் கனமழை பெய்து, ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்த இயற்கை பேரிடரில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை இன்று நிலவரப்படி 52ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ட்டிலி புயலின் எதிரொலியால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியாக வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்த நிலையில், இன்று ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.