சபரிமலையில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், பெண் செய்தியாளர் கவிதா, சமூக ஆர்வலர் ரஹானா ஆகியோர் பாதுகாப்புடன் திருப்பி அனுப்ப கேரளா அரசு முடிவு செய்ததையடுத்து, அவர்கள் இறங்கி வந்துக்கொண்டிருக்கின்றனர்.
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து பல மாநிலங்களில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வரும் சம்ப்ரதாயத்தை எவ்வாறு மாற்றலாம் என்று பக்தர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, நேற்று ஐப்பசி மாதம் முதல் நாளை முன்னிட்டு சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. இதனால், ஏராளமான பெண்கள் கருப்பு உடை அணிந்துக் கொண்டு சபரி மலையை ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கல்வீசி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதன்எதிரொலியால், சபரிமலை ஏற வந்த பெண்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த பெண் செய்தியாளர் கவிதா மற்றும் எர்ணாகுலத்தை சேர்ந்த பெண் ரஹானா ஆகியோர் போராட்டக்காரர்களையும் மீறி, துணிந்து சபரிமலை ஏறினர். இருவருக்கும் கவங்களுடன் கூடிய பாதுகாப்பு மற்றும் அவர்களை சுற்று சுமார் 200 போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். தொடர்ந்து, இன்று காலை 9 மணியளவில் சன்னிதானத்தை நெருங்கினர். ஆனால், அங்கும் அவர்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பயது.
சபரிமலை சன்னிதானத்தை இருவரும் நெருங்கி வந்த நிலையில், போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியது. சன்னிதானத்தின் உள்ள அமர்ந்து பக்தர்கள் போராடத் தொடங்கினர். போராட்டம் வலுவடைந்ததை அடுத்து. போலீஸ் ஐஜி.ஸ்ரீஜித், அங்கு பங்கதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இந்த இரண்டு பெண்களும் தொடர்ந்து சென்றால், போராட்டம் மேலும் வலுவடையும் என்ற சூழல் ஏற்பட்டதால், இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்பும்படி கேரள அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இரண்டு பெண்களையும் போலீசார் பாதுகாப்பாக திருப்பி அழைத்து வருகின்றனர்.