இமயமலை, கங்கோத்திரி பனிமுகடு பகுதியில் உள்ள 4 சிகரங்களுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இமயமலையில் கங்கோத்திரி பனிமுகடு பகுதியில் 6557 மீட்டர், 6566 மீட்டர், 6160 மீட்டர், 6100 மீட்டர் உயரங்களில் உள்ள 4 சிகரங்களுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த சிகரங்களுக்கு முறையே அடல்1, அடல்2, அடல்3, அடல்4 ஆகியோர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இந்த 4 சிகரங்களிலும் நேரு மலையேற்ற கல்வி நிறுவனத்தின் முதல்வர் கர்னல் அமித் விஷித் தலைமையில் சென்ற குழு, தேசியக் கொடிகளை ஏற்றி வைத்து திரும்பி உள்ளது. இந்த தகவலை, கர்னல் அமித் விஷித் நேற்று தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவரான வாஜ்பாய், இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார். பாரத ரத்னா, பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.