மேற்கு வங்க வன்முறை பொய்யான புகைப்படத்தை பரப்பியவர் கைது

One Arrested For Sharing Fake Image Of West Bengal Violence

Jul 9, 2017, 12:30 PM IST

மேற்கு வங்கத்தில் பிரகனாஸ் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வன்முறையின் போது, பெண் ஒருவரை துகிலுரிப்பது போன்ற பொய்யான புகைப்படம் ஒன்றை சமூகவலைத் தளங்களில் பரவிட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க வன்முறை

கடந்த 2014ம் ஆண்டு வெளியான 'ஆவுரத் கிலானோ நகி' என்ற போஜ்பூரி படத்தில் இடம்பெற்ற காட்சியை மேற்குவங்க வன்முறையில் நிகழ்ந்ததாக, சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டது. இந்த புகைப்படத்தை பதிவேற்றிய விஜிதா மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹரியானா மாநில பிஜேபி கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தவதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.

You'r reading மேற்கு வங்க வன்முறை பொய்யான புகைப்படத்தை பரப்பியவர் கைது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை