ஒரு பேனரை பிடிச்சதுக்காக ட்விட்டர் சிஇஓவை ஒட்டுமொத்தமாக வெச்சு செய்த பிராமணர்கள்!

Twitter CEO Jack Dorsey slammed for smash Brahminical patriarchy placard

by Mathivanan, Nov 23, 2018, 13:46 PM IST

தங்கள் மேலாதிக்கத்தை விமர்சிக்கும் பதாகையை இந்தியா வந்திருந்த ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்ச் கையில் பிடித்திருந்தது மாபெரும் குற்றம் என கொந்தளித்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கின்றனர் பிராமணர்கள்.

இந்தியா வருகை தந்த ஜாக் டோர்ச்சை பெண்கள் குழு ஒன்று சந்தித்து பேசியது. அப்போது பிராமணர் ஆதிக்கத்தை நொறுக்குவோம் என்கிற பதாகையை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

இப்பதாகையை ஜோக் டோர்ச்சிடம் பெண்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொடுத்தார். இந்த பதாகையுடன் டோர்ச் இருக்கும் படம் வெளியானதுதான் தாமதம்.

ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கும் அத்தனை பிராமணர்களும் ஒன்று திரண்டுவிட்டனர். இது பிராமணர்கள் மீதான வன்முறையை தூண்டுகிறது என்றெல்லாம் குய்யோ முறையோ என குமுறி குமுறி பதிவிட்டனர்.

இதனால் வேறுவழியே இல்லாமல் ஜோக் டோர்ச் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உருவானது. அதே நேரத்தில் ஜோக் டோர்ச்சுக்கு ஆதரவான குரல்களும் வலுத்து வருகின்றன.

சமூக வலைதளங்களின் பேசுபொருள் இப்போது இதுதான்!

You'r reading ஒரு பேனரை பிடிச்சதுக்காக ட்விட்டர் சிஇஓவை ஒட்டுமொத்தமாக வெச்சு செய்த பிராமணர்கள்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை