தங்கம் வென்றது போலவே தேர்தல் வெற்றியும் கைகூடும் என காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 7- ந் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக சதுல்பூர் தொகுதியில் கிருஷ்ணா பூனியா போட்டியிடுகிறார் வட்டு எறிதலில் பல பதக்கங்க்ளை வென்ற கிருஷ்ண பூனியா தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். 'தங்கம் வெல்வதைப் போலவே தேர்தல் வெற்றியையும் நான் கருதுகிறேன்' என்று கிருஷ்ண பூனியா தெரிவித்துள்ளார்.
2010- ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வட்டு எறிதலில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற கிருஷ்ண பூனியா. கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டார். பகுஜன் ஜனதா கட்சி இந்த தொகுதியை கைப்பற்றியது. பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தை பிடிக்க . கிருஷ்ண பூனியாவால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. ஆனால், இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார் கிருஷ்ண பூனியா.
பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் அரசியில் ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் சித்து தற்போது பஞ்சாப் அமைச்சர். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்வர்த்தன் சிங் ரதோர் துப்பாக்கி சூடும் வீரர். அந்த வரிசையில் கிருஷ்ண பூனியாவும் அரசிலில் வெற்றி பெறுவாரா... பொறுத்திருந்து பார்ப்போம்.