சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரத்தால் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்கள் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு 3ம் கட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின.
பல்வேறு அமைப்புகள் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
இந்த 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது வரும் 16ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்நிலையில் 3ம் கட்டமாக ஐஜி ஜித் தலைமையில் டிஜஜி, 6 எஸ்பிக்கள், 29 டிஎஸ்பிக்கள், 90 இன்ஸ்பெக்டர்கள், 389 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 230 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் வரும் 29ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை 4ம் கட்டமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.