பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா, ஜெயா டிவி அலுவலகம் உட்பட 200 இடங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 5 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், பல கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான தினகரன், விவேக், கிருஷ்ணப்பிரியா ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சசிகலாவிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முயற்சித்தனர்.
ஆனால் சசிகலாவோ, மவுன விரதம் இருப்பதாக கூறி ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் பெங்களூரு சிறை அதிகாரிகள் அனுமதியுடன் இன்று சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளையும் இந்த விசாரணை நீடிக்கும்.