தமிழர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்துகள்: பிரிட்டன் பிரதமர் தெரசா மே ட்வீட் (வீடியோ)

Advertisement

தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் பேசி, தைப் பொங்கல் வாழ்த்துகளையும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரசா மே பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது: வணக்கம். தைப் பொங்கல் விழா தொடங்குவதால் பிரிட்டன் வாழ் தமிழர்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ள தமிழ் மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழையன கழிந்து புதிய வாய்ப்புகளை ஆரத்தழுவிக் கொள்ளும் தருணம் இது. உழவுக்கு மட்டும் நன்றி செத்தும் நாள் அல்ல. இது நமது உறவினர்களுக்கு நண்பர்களுக்கும் அண்டைவீட்டாருக்கும் நன்றி செலுத்தும் நாள் இது.

பிரிட்டன் வாழ் தமிழர்களின் பங்களிப்புக்கு நாள் அனைவரும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இது நல்லதொரு வாய்ப்பு. பிரிட்டன் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பு எதிர்பார்ப்பை விஞ்சியது. பிரிட்டன் மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

இத்தேசம் அனைத்து மக்களுக்கும் வாய்ப்புகளை நல்கி அவரவர் லட்சியங்களை அடைய உதவும் தேசமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

பிரிட்டனை பன்முகத்தன்மை கொண்ட நாடாக ஆக்கியதில் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு அற்புதமானது. எனவே பொங்கல் பண்டிகை கொண்டாடும் பிரிட்டன் தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள்
இவ்வாறு அதில் கூறியருந்தார்.

தெரசா மே ட்விட்டரில் பகிர்ந்த வாழ்த்து இதோ.. 

Advertisement
/body>