கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில் இன்றும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் கடந்த 21ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழ¬, கிறிஸ்துமஸ் என தொடர்ந்து விடுமுறைகள் இருந்தன. இதனால், தொடர்ந்து 5 நாட்களாக வங்கிப்பணிகள் முடங்கிப்போய் இருந்தன.
விடுமுறை நாட்களை தொடர்ந்து இன்று வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கி ஊழியர்கள் இன்றும் தங்களது வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட சுமார் 3 லட்சம் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொடர் விடுமுறையை அடுத்து இன்றும் வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.