தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன நன்மைகள்..?

Advertisement

தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு ஏற்படும் என்று பார்க்கலாமா..

இளநீருக்கும், தேங்காய் தண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு.. நாம் இப்போ பார்க்கப்போவது இளநீர் அல்ல தேங்காய் தண்ணீர். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.

தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும். சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்று
வதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.

ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது.
இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம். எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.

நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>