ருசியான கோழி முட்டை சூப் ரெசிபி..

ருசியான கோழி முட்டை சூப் ரெசிபி.. எத்தனையோ வகை சூப் ருசிச்சிருப்பீங்க.. ஆனா கோழி முட்டைல சூப் செஞ்சி டேஸ்ட் பண்ணிருக்கீங்களா ?? இப்போவே ட்ரை பண்ணுங்க ஈஸியான டேஸ்டியான கோழி முட்டை சூப் ரெசிபி..

சமைக்க தேவையானவை

கோழி (எலும்புடன்) - கால் கிலோ முட்டை - ஒன்று காரட், பீன்ஸ் - கால் கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 2 பூண்டு - 2 பல் இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி சோம்பு தூள் - கால் தேக்கரண்டி புதினா - சிறிது பாதாம் தூள் (அ) விழுது - 2 மேசைக்கரண்டி எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

உணவு செய்முறை

முதலில் காய்கறிகளை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளுடன், நறுக்கிய தக்காளி, ஒரு பச்சை மிளகாய், சுத்தம் செய்த கோழி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை வேக விடவும்.

பின்பு பாதாம் தூள் சேர்த்து கொதிக்க விடவும். தவாவில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டு, மீதமுள்ள பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

தாளித்தவற்றை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி விட்டு, முட்டையை உடைத்து ஊற்றவும். புதினா, வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும். இதோ ருசியான கோழி முட்டை சூப் தயார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :