ஒரே பொருளான ரவையில் ஐந்து வகை சுவையான,சூப்பரான டிபன் ரெசிபியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்...
ரவையில் தோசை:-
மொறு மொறு தோசை யாரு தான் வேண்டாம்னு சொல்லுவாங்க. எல்லோருக்கும் மிகவும் பிடித்த ரவை தோசை எப்படி செய்வது என்றால் அரிசி மாவோடு ரவையும் சேர்த்து தவாவில் ஊற்றினால் ரவை தோசை ரெடி..
ரவையில் உப்புமா:-
வெறும் உப்புமா செய்தால் யாரும் விரும்ப மாட்டார்கள் ஆனால் ரவையில் பீன்ஸ்,கேரட் ஆகிய காய்கறிகளை சேர்த்து சிறிது நெய் ஊற்றினால் சுவையோ சுவை!!இது உடல் எடையை கூட குறைக்கும் ஒரு சூப்பர் டிஷ் ஆகும்.
ரவையில் இட்லி:-
அரிசி மாவோடு ரவை சேர்த்து ஊற்றி வேக வைத்தால் வட்டமான ரவை இட்லி ரெடி..தினமும் அரிசி மாவில் இட்லி சாப்பிட்டு பழகியவர்களுக்கு ஒரு புதிய உணவாக இருக்கும்.
ரவையில் ஆனியன் தோசை:-
அரிசி மாவில் ரவையை ஊறவைத்து பிறகு மாவை தோசை கல்லில் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவினால் சுட சுட ஆனியன் ரவை தோசை ரெடி..
ரவையில் ஊத்தாப்பம்:-
ஊத்தப்பமும் தோசையை போல தான் இருக்கும்.ஆனால் சற்று தடிமனாக காணப்படும்.அரிசி மாவில் ரவையை சேர்த்து தடிமனாக மாவை ஊற்றினால் ஊத்தாப்பம் ரெடி..இதில் தேவைப்பட்டால் வெங்காயமும் சேர்த்து கொள்ளலாம்...