எஸ்பிபி பற்றி திங்கட்கிழமை நல்ல செய்தி.. மகன் சரண் மகிழ்ச்சி தகவல்..

by Chandru, Sep 3, 2020, 18:28 PM IST

பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்ர மணியம் கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப் பட்டு வருகிறது. அமெரிக்க டாக்டர்களுடன் மருத்துவமனை டாக்டர்கள் ஆலோ சனை பெற்று சிகிச்சை அளிக்கின் றனர். முன்னதாக திரையுலகினரும் ரசிகர் களும் எஸ்பிபி குணம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.


டாக்டர்கள் சிகிச்சை, பிரார்த்தனை களுக்குபிறகு எஸ்பிபி பற்றி நல்ல செய்திகளாக வந்துக்கொண் டிருக்கிறது சமீபத்தில் எஸ்பிபி சரண் தந்து தந்தையின் உடல்நிலை பற்றி கூறும்போது. மருத்துவமனை சென்று என் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் கூறும்போது என் தந்தையின் நுரையீரலில் முன்னேற்றம் தெரிகிறது. இது அவர் குணம் அடைவதற்கான முதல் படி இன்னும் நீண்ட சிகிச்சை இருக்கும் அது சீராக அவரது உடலை குணம் அடையச் செய்யும். அவர் அறையில் பாடல்கள் ஒலிக்கவைக்கப்படிருக்கிறது அதை கேட்டபடி விரல்களால் தாளம் போடு கிறார். பின்னர் அவர் சில வார்த்தைகள் எழுதி காட்டினார். அவருக்கு பத்திரிகை படித்துக்காட் டப்படு கிறது. டாக்டர்கள் கேட்பதற்கு பதில் அளிக்கிறார். அவரிடம் நல்ல முன்னேற்றம் காணப் படுகிறது. அவருக்காக பிரார்த னை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

கடந்த ஒரு வாரமாகவே எஸ்பிபி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் மற்றும் எஸ்பிபி மகன் சரண் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று எஸ்பிபி சரண் தனது சமூக வலைத் தளத்தில் வெளி யிட்டுள்ள வீடியா வில், அப்பா எஸ்பிபி உடல்நிலை நான்காவது நாளாக சீராக உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அதாவது திங்கட் கிழமை நல்ல செய்தி யை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தி ருக்கிறார். அநேகமாக கொரோனா தொற்று நெகட்டிவ் ரிசல்ட் ஆக இருக்கும் என்றும் அத்துடன் எஸ்பிபி யை வீடியோவில் காட்டி மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று தெரிகிறது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை