உடல் எடை குறைவதற்கு பயன்படுத்தும் உணவு முறையானது விந்தணுவின் தரம் உயரவும் காரணமாகிறது என்பது தெரிய வந்துள்ளது. கார்போஹைடிரேடு குறைந்த உணவு முறையை கடைப்பிடித்தால் விந்தணுவின் தரம் உயர வாய்ப்புள்ளது.
ஸ்பெயின் உணவு முறை
ஸ்பெயின் நாட்டில் உடல் எடையை குறைப்பதற்காக 2004ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உணவு முறையின் பெயர் பிரோனோகால். இவ்வுணவு முறையின்படி ஒருநாளில் 50 கிராமுக்கும் குறைவான கார்போஹைடிரேடு மட்டுமே சாப்பாட்டில் இருக்கவேண்டும். ஒருநாளைக்கு 800 கிராமுக்கு மேல் கலோரி உடலில் சேரக்கூடாது.
முதல் நபர்
இவ்வுணவு முறையை கொண்டு ஆய்வு செய்யப்பட்ட ஒருவர் மூன்று மாதங்களில் 27 கிலோ எடை குறைந்திருந்தார். அவருடைய உடலில் கொழுப்பின் சதவீதம் 42 என்ற அளவிலிருந்து 34 என்ற அளவுக்கு குறைந்திருந்தது. விந்தணுவின் தரம் 100 விழுக்காடு மேம்பட்டிருந்தது. ஆண்களுக்கான டெஸ்டோடீரான் ஹார்மோன் இருமடங்கு அதிகரித்திருந்தது தெரிய வந்தது.
இரண்டாம் நபர்
இவ்வுணவு முறையை கடைப்பிடித்த இன்னொருவர் மூன்று மாதங்களில் 9 கிலோ எடை குறைந்திருந்தார். உடலின் கொழுப்பு சதவீதம் 25 என்ற அளவிலிருந்து 21 ஆக குறைந்திருந்தது. விந்தணு 100 மில்லியன் அதிகமாக பெருகியிருந்தது. ஆனால் இவருக்கு டெஸ்டோடீரானின் அளவு சற்று குறைந்திருந்தது.
அதிக கட்டுப்பாடு
அதிக கட்டுப்பாட்டுடன் கூடிய உணவு முறை காலப்போக்கில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். பாலியல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு அதிக கட்டுப்பாடான உணவு முறையை கடைப்பிடிக்கவேண்டியதில்லை. ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டால் பாலியல் ஆரோக்கியம் மேம்படும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது விந்தணுவின் எண்ணிக்கை குறைய வழிவகுக்கும். மீன் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டால் விந்தணுவின் எண்ணிக்கையும், பாலியல் நாட்டமும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன