இயற்கை மருத்துவத்தில் எந்த வித நோயா இருந்தாலும் சரி அதை ஈசியாக விரட்டி விடலாம்.இப்பொழுது இருக்கும் கடின காலத்தில் உயிரோட இருப்போமா என்ற அச்சம் அனைவரின் மனதில் நிலவி வருகிறது.நாம் சாப்பிட்ட பின் செரிமானத்திற்காக கேஸ்ட்ரிக் அமிலம் வெளியாகும்.இந்நிலையில் இந்த அமிலம் அதிக அளவு சுரந்தால் மட்டுமே உடம்பில் அசிடிட்டி ஏற்படும்.சரி வாங்க எப்படி அசிடிட்டியை எப்படி விரட்டலாம் என்பதை பார்ப்போம்.
அசிடிட்டியின் அறிகுறிகள்:-
முதலில் நாம் சாப்பிடும் எந்த உணவையும் வயிறு எடுத்துக்கொள்ளாது.வயிற்றின் உள்ளே புண்கள் வந்து இருப்பதால் காரம் எதுவும் எடுத்துக்க கூடாது.வயிறு,தொண்டை மற்றும் நெஞ்சு பகுதிகளில் எரிச்சல்,
வாயில் துர்நாற்றம் வீசுவது,அஜீரணம் கோளாறு,புளிப்பு சுவையை உணறுதல்.குமட்டல்,உடல் சோர்வு,
மலச்சிக்கல் போன்றவற்றை அசிடிட்டி இருக்கும் பொழுது நாம் உணரும் அறிகுறிகள் ஆகும்.
கிராம்பை எப்படி பயன்படுத்துவது:-
தினமும் காலையில் மூன்று முதல் நான்கு கிராம்பு கடித்து சாப்பிட வேண்டும்.ஏதாவது ஒரு வேளை சாப்பாட்டில் கிராம்பை கலந்து கொள்வது அவசியம்.அவ்வாறு உண்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்தும்.வயிறில் எந்த வித கோளாறும் வராதபடி தடுக்க கிராம்பு உதவுகிறது.