நடிகர்கள் முதல் உடலை குறைக்க கடினமாக உழைத்து வருகின்றனர். இதற்கு சான்றாக 100 கிலோவிற்கு மேலாக இருந்த நடிகர் சிம்பு படம் வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டு உடலை குறைத்துள்ளார். இது போல கீர்த்தி சுரேஷ் போன்ற பலரும் உடலை குறைத்து வருகின்றனர். நாம் சிறு வயதாக இருக்கும் பொழுதே ஆரோக்கிய உணவு எடுத்து கொண்டால் மட்டுமே நீண்ட நாள் வாழ முடியும். இந்த வயசில் கல்லு சாப்பிடால் கூட கரைந்து விடும் என்று சொல்லுவார்கள். ஆதலால் நாம் 30 வயது வரைக்கும் வரை உணவு முறையை சரியாக கையாள வேண்டியது அவசியம்.
சத்தான உணவை சாப்பிட்டால் உடல் பருமன் என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்பொழுதும் ஸ்லிம்மாக இருக்கலாம். ஒரு திரைப்பட பாடலில் கூட "ஊசி போல உடம்பு இருந்தால் தேவை இல்லை பார்மசி" என்கின்ற வரி நமது வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும். இந்த டீடாக்ஸ் நீரை தினமும் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடலை குறைக்க உதவுகிறது.இந்த நீரை எளிதாக பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். இதை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
வெள்ளரிக்காய் -5 துண்டுகள்
எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - தேவையான அளவு
மிளகு -தேவையான அளவு
புதினா -சிறிதளவு
செய்முறை:-
முதலில் ஒரு பாட்டில் முழுவதும் தண்ணீரை நிரப்பி கொள்ளவும். பிறகு வெள்ளரிக்காயை வட்டம் வட்டமாக நறுக்கி தண்ணீரில் போடவும். அதனுடன் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும்.
ஒரு 10 நிமிடத்திற்கு பிறகு அதில் தண்ணீருக்கு தேவையான பெருஞ்சீரகம், மிளகு, புதினா ஆகியவையே அலசி பாட்டிலில் இருக்கும் தண்ணீரில் போட வேண்டும். இந்த தண்ணீர் ஒரு மணி நேரம் ஊற வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் அப்பொழுது தான் அதில் சேர்த்த பொருள்களின் சத்துக்கள் தண்ணீரில் கலக்க ஈசியாக இருக்கும்.
இதனை தினமும் அதிகாலையில் குடிக்கலாம். அல்லது பாட்டலில் சேமித்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அருந்தி வரலாம். இதனை ஒரு நாள் கூட விடாமல் குடித்து வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்...