மூட்டு வலியை எளிதே குணமாக்கும் பாட்டி மருத்துவம்..!

by Logeswari, Nov 18, 2020, 21:42 PM IST

ஆண்கள், பெண்கள் என இரு பாலினருக்கும் வயசு எற எற கால், கை மற்றும் மூட்டு வலிகள் போன்றவை ஏற்படும். இதனை குணப்படுத்த இயற்கை முறையில் ஏராளமான வழிகள் உள்ளன. இதனை தினமும் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது. அது மட்டும் இல்லாமல் சளி பிடித்து இருந்தால் கூட இதை பயன்படுத்தலாம். மூட்டு வலியை ஆங்கிலத்தில் ஜாயின்ட் பெயின் என்று கூறுவார்கள். அதாவது எலும்புகள் சேரும் அனைத்து இடங்களிலும் பலருக்கும் வலிகள் ஏற்படும்.சரி எலும்பு சார்ந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
லவங்க பட்டை- 3 -5
தேன்- 3 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் தேவைக்கு ஏற்ப லவங்க பட்டையை எடுத்து மிக்சியில் மைய பொடியாக அரைத்து கொள்ளவேண்டும். அரைத்த பொடியை காற்று புகாத ஜாரில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணம் எடுத்து இரண்டு முதல் மூன்று ஸ்பூன் அளவிற்கு பொடியை எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக லேகியம் போல் கலந்து கொள்ள வேண்டும். பத்தே நிமிடத்தில் மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் பாட்டி வைத்தியம் ரெடி..

தினமும் இந்த கலவையை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், கை, கால், விரல்கள் மூட்டின் அனைத்து இடங்களிலும் ஏற்படக்கூடிய வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

நன்மைகள்:-
இயற்கையாகவே லவங்கப் பட்டையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே உள்ளன. குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது. இதனுடன் தேனும் சேரும் போது லவங்கப் பட்டையின் சக்தியானது இருமடங்காக அதிகரிக்கச் செய்கிறது. எனவே இது போன்ற வலி இருப்பவர்கள் தேனையும் லவங்கப் பட்டையையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது விரைவில் நிவாரணம் தரும்.

லவங்க பட்டை என்பது எந்த வித கெமிக்கலும் சேர்க்காத பொருள் என்பதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது. இதனை இடைவிடாமல் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பல மடங்கு வலிமை அதிகரிக்கும்..

You'r reading மூட்டு வலியை எளிதே குணமாக்கும் பாட்டி மருத்துவம்..! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை