என் முன்னாடியே அனைத்தும் நடக்கும்.. வேதனையில் டாப்ஸி!

taapsee shares his cinema experience

by Sasitharan, Nov 18, 2020, 22:09 PM IST

வெற்றிமாறன் இயக்கியத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவா் நடிகை டாப்ஸி. அதன்பின்னா் ஆடுகளம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைதொடர்ந்து டாப்ஸி பல்வேறு தமிழ் படங்களிலும் நடித்து வந்துள்ளாா். மேலும் டாப்ஸி பாலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியுள்ளாா். இந்நிலையில், தன் சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்தில் தான் பெற்ற அனுபவங்கள் பற்றியும் தனக்கு நேர்ந்த வித்தியாசமான சம்பவங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளாா் நடிகை டாப்ஸி.

அதில், ``சினிமா பயணம் தொடங்கிய, ஆரம்ப காலத்தில் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்காது, எனவும் தன்னுடைய இன்ட்ரோ, காட்சிகள் சிறப்பாக அமைந்தால் அதனை நீக்க வேண்டும் என்று சில நடிகர்கள் கூறுவாா்கள். மேலும் நடிகர்களின் முந்தைய படம் சரியாக ஹிட் கொடுக்காமல் ஓடவில்லை என்றாலும் நீங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவேண்டும் என்று சில இயக்குனர்கள் பேரம் பேசுவாா்கள்" என டாப்ஸி தெரிவித்துள்ளாா். ``ஹீரோக்களுக்கு நான் பேசும் டையலாக் பிடிக்காது. அதனால் என்னை மாற்ற வேண்டும் என்று சொல்வாா்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவிப்பேன். ஆனால் உடனே அவர்கள் டப்பிங் கலைஞர்களைக் கொண்டு மாற்றி விடுவார்கள். மேலும் இது போன்ற சம்பவங்கள் என் முன்னாடியே நடக்கும்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

எனினும், ``இதனால் நான் சோர்ந்து போகவில்லை . அன்று முதல் எனக்கு நிறைவைத் தருகின்ற படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறேன். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே நான் தேர்வு செய்து வருகிறேன். இதனால் வருமானம் பாதிக்கப்படும் என பலர் சொன்னாா்கள். ஆனால் நான், அதை பற்றியலாம் யோசிக்கவில்லை. ஒரு பெண் இயக்கும் படங்களில், பெண்ணே நடிக்க முயற்சிக்கும் போதெல்லாம் ஒரு முத்திரை குத்தப்படுகிறது. பெண்களை முன்னணி கதாபாத்திரமாக ஏற்றுக்கொள்வதில் ஆண் நடிகர்களுக்கு தயக்கம் இருந்து கொண்டு தான் வருகிறது. நீண்டதொரு பயணத்தில் இது சற்று கடினமான விஷயம் தான் என அவர் பேசியுள்ளாா்.

You'r reading என் முன்னாடியே அனைத்தும் நடக்கும்.. வேதனையில் டாப்ஸி! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை