கொரோனாவுக்கு எதிரான தங்கள் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 90 சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த pfizer தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து 90% மக்களுக்கு அந்நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டவர்களில் யாருக்கும் இதுவரை பாதுகாப்பு பிரச்னை எழவில்லை. 6 நாடுகளில் 43,500 பேருக்கு இம்மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மருந்து விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. இதேபோல் இன்னொரு அமெரிக்க நிறுவனமம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து 95 சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. சினொவாக் பயோடெக் சீன நிறுவனம் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்றும் சோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சோதனையில் தடுப்பூசியை 2 டோஸ் கொடுத்த பிறகு நோயாளிகளுக்கு 4 வாரத்துக்குள் எதிர்ப்பு சக்தி உருவானது தெரியவந்துள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், சீனர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.