ஆஸ்துமாவை போக்கும்... ஆண்மையை பெருக்கும்... அது என்ன தெரியுமா?

Advertisement

தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இலங்கையில் தூதுவளை காணப்பட்டாலும் தமிழகத்திலேயே இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மருத்துவத்தில் இது முக்கியமான ஒன்று. 'வருமுன் காப்போம்' என்ற எச்சரிக்கை உணர்வு உள்ளவர்கள், கபம் என்ற சளி சார்ந்த உடல் தொல்லைகள், மூச்சுவிடுதல் தொடர்பான ஆஸ்துமா தொல்லைகள் வராமல் தடுப்பதற்கு இதை உண்ணலாம். தூதுவளை, தானாக வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்த தாவரம். வெறுமனே விதைகளை தூவி வீட்டிலேயே இதை எளிதாக வளர்க்கலாம். இதன் தாவரவியல் பெயர் சொலானம் டிரைலோபேட்டம் (Solanum trilobatum) ஆகும். இது ஊதா நிறத்தில் பூக்கும். அரிதாக வெள்ளை நிறத்தில் பூக்கும் தூதுவளையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தூதுவளை பழங்கள் நல்ல சிவப்பு நிறத்தில் காணப்படும்.

சளி, இருமலுக்கு மருந்து
இருமல், சளி தொல்லை இருப்பவர்கள் முழு தூதுவளை செடியையும் அரைத்துத் தண்ணீரில் போட்டு, நன்றாகக் கொதிக்கவைத்து கஷாயமாக பருகலாம். பிள்ளைகளுக்கு உண்டாகும் இருமலை குறைக்க, தூதுவளை இலைகளை வெண்ணெய்யில் வதக்கியெடுத்து பின்னர் சாறாக பிழிந்து, சிறிது தேன் கலந்து நாவில் தடவவேண்டும். தூதுவளை இலையை உலர்த்தி பின்னர் பொடித்து அந்தப் பொடியுடன் கொஞ்சம் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் மூக்கடைப்பு, மார்புச்சளி, இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டை கரகரப்பு போன்றவை மட்டுப்படும்.

தொண்டை சதை (டான்சில்ஸ்)
தொண்டை சதை வளர்ச்சியால் அநேக பிள்ளைகள் அவதிப்படுகின்றனர். ஒரு கைப்பிடி அளவு தூதுவளை இலை எடுத்துக் கொள்ளவேண்டும். அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவை ஒவ்வொன்றிலும் 10 கிராம் அளவு எடுத்து இடிக்கவும். தூதுவளை இலையை சேர்த்து இடித்து, ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, கால் பாகமாக வற்றச் செய்யவும். அதில் 50 மில்லி லிட்டர் தினம் 3 வேளைகள் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் தொண்டை சதை கரையத் தொடங்கும்.

உடல் வலி, தலைபாரம்
தூதுவளை காய்களை மோரில் ஊற வைத்து பின்னர் உலரவிட்டு வற்றலாகப் பயன்படுத்தலாம். தூதுவளை காய்களை வெயிலில் காயவைத்து, நன்கு காய்ந்தபின்னர் பொடியாக்கி மூன்று சிட்டிகை அளவு வெந்நீரில் கலந்து பருக, உடல் வலி, தலை பாரத்திலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கல்
தூதுவளை பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். அவற்றை பறித்துக் காய வைத்துப் பொடித்து உள்ளுக்கு எடுத்து வர, மலச்சிக்கல் குணமாகும். வயிற்றில் அமில தன்மையால் ஏற்படும் அசிடிட்டி எனப்படுகிற தொல்லை தீரும்.

ஆஸ்துமா
ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் தூதுவளை இணையில்லாத சக்தி கொண்டது. தூதுவளை இலையின் சாற்றை தேன் சேர்த்து உள்ளுக்கு எடுத்துவர, தீவிர ஆஸ்துமாவிலிருந்து சுகம் கிடைக்கும். நுரையீரலிலும் மூச்சுக்குழாயிலும் உள்ள கோழையை வெளியேற்றும் தன்மை தூதுவளைக்கு உள்ளது. பத்து முதல் பதினைந்து தூதுவளை இலைகளை நறுக்கி, சின்ன வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய்யில் வதக்கி, சிறுநெல்லிக்காய் அளவு இருவேளை சாப்பிட மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

ஆண்மை
இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்து வருகிறது என்று சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. முன்பு ஒரு மில்லி விந்து திரவத்தில் 60-120 மில்லியன் விந்து அணுக்கள் இருந்தன. 15 மில்லியன் விந்தணுக்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று தற்போது கருதப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் விந்தணுக்களில் 10 விழுக்காடு மட்டுமே கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதாக உள்ளது தெரியவந்துள்ளது. 31 முதல் 40 வயதுள்ள தம்பதியரில் 46 விழுக்காட்டினருக்கு கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை எனவும், அதன் விளைவாகவே செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகி வருகின்றன எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். சித்த மருத்துவத்தில் தூதுவளை `காயகல்பம் என அழைக்கப்படுகிறது. தூதுவளை மலர்களை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட, நரம்புகள் வலுவடைந்து, உடல் உரம் பெறும். 'காமம் பெருக்கிக் கீரைகள் எனப்படும் முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மழைக்கால துவையல்
தூதுவளையோடு, தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யப்படும் தூதுவளை துவையல் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாகும்.

கீரைகளிலேயே இயற்கையான ஊக்க மருந்து (ஸ்டீராய்டு) கொண்டது தூதுவளையாகும். நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் (ஆன்ட்டிபாக்டீரியல்), பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் (ஆன்ட்டி ஃபங்கல்) தூதுவளைக்கு உள்ளது. புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றலும், நீரிழிவை கட்டுக்குள் வைக்கும் சக்தியும் தூதுவளைக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>